UPDATED : ஜூலை 06, 2024 12:00 AM
ADDED : ஜூலை 06, 2024 09:56 AM

கோவை:
இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கம் ,தென்னிந்திய பட்டயக் கணக்காளர்கள் பிராந்திய கவுன்சில் கோவை கிளை (SIRC ) மற்றும் தென்னிந்திய பட்டயக் கணக்காளர்கள் மாணவர்கள் சங்கம் கோவை கிளை (SICASA ) சார்பில், சி.ஏ., மாணவர்களுக்கான தேசிய அளவிலான, இரண்டு நாள் கருத்தரங்கு நேற்று, கிருஷ்ணம்மாள் கல்லுாரி அரங்கில் நடந்தது.
ஐ.சி.ஏ.ஐ., முன்னாள் தலைவர் ராமசாமி பேசுகையில், பட்டய கணக்காளர்களுக்கான தேவை அனைத்து துறைகளிலும் உள்ளது. 2047ல், இந்தியாவில் மட்டும் 30 லட்சம் பட்டய கணக்காளர்கள் தேவை இருக்கும் என்றார்.
இந்நிகழ்வில், சி.ஏ., படிப்பின் எதிர்கால வாய்ப்புகள், ஜி.எஸ்.டி., ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ், உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர்.
இதில், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் , நிதி பிரிவின் முன்னாள் இயக்குனர் கேசவன், கோவை ஐ.சி.ஏ.ஐ., மத்திய கவுன்சில் உறுப்பினர் ஸ்ரீபிரியா குமார், எஸ்.ஐ.சி.ஏ.எஸ்.ஏ., கோவை கிளை தலைவர் தங்கவேல், ஐ.சி.ஏ.ஐ., கோவை கிளை செயலாளர் சர்வஜித், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.