UPDATED : நவ 01, 2024 12:00 AM
ADDED : நவ 01, 2024 05:11 PM
சென்னை:
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பட்டய கணக்காளர் இடைநிலைத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
குரூப் 1 தேர்வை மொத்தம் 69,227 பேர் தேர்வு எழுதியதில், 10,505 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குரூப் 2ல் தேர்வு எழுதிய 50,760 பேரில் 8,117 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மொத்த தேர்ச்சி சதவீதம் 5.66 ஆகும்.
மும்பையைச் சேர்ந்த பரமி உமேஷ் ப்ரேக் 80.67 சதவீத மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். சென்னையைச் சேர்ந்த தான்யா குப்தா 76.50 சதவீத மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், புதுடில்லியைச் சேர்ந்த விதி ஜெய்ன் 73.50 சதவீத மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விவரம் வருமாறு:
ஆண் தேர்வர்கள்: 37,774 தேர்ச்சி பெற்றவர்கள்: 7,732
பெண் தேர்வர்கள்: 32,663 தேர்ச்சி பெற்றவர்கள்: 6,126
மொத்த தேர்வர்கள்: 70,437 மொத்த தேர்ச்சி: 13,858
ஆண் தேர்வர்களின் தேர்ச்சி விகிதம் 20.47 ஆகவும், பெண் தேர்வர்களின் தேர்ச்சி விகிதம் 18.76 சதவீதமாகவும் உள்ளன. 453 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு முடிவுகள் குறித்து மேலும் அறிந்து கொள்ள www.icai.nic.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.