தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.ஏ., தேர்வு முடிவு வெளியீடு; 23,861 பேர் தேர்ச்சி

சி.ஏ., தேர்வு முடிவு வெளியீடு; 23,861 பேர் தேர்ச்சி

சி.ஏ., தேர்வு முடிவு வெளியீடு; 23,861 பேர் தேர்ச்சி


UPDATED : மார் 04, 2025 12:00 AM

ADDED : மார் 04, 2025 05:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 04, 2025 12:00 AM ADDED : மார் 04, 2025 05:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பட்டய கணக்காளர் அடிப்படை தேர்வு முடிவுகள் வெளியானது. 1,10,887 பேர் தேர்வு எழுதிய நிலையில், 23,861 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்திய பட்டய கணக்காளர் அமைப்பான ஐ.சி.ஏ.ஐ., சார்பில், சி.ஏ., என்ற பட்டய கணக்காளர் தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலை தகுதித்தேர்வு, இடைநிலை தேர்வு மற்றும் இறுதி தேர்வு என, மூன்று நிலைகள் நடத்தப்படுகின்றன.

ஜனவரி மாதம் நடந்த சி.ஏ., அடிப்படைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 21.52 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 887 மாணவர்கள் பங்கேற்ற நிலையில், 23 ஆயிரத்து 861 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் 533 நகரங்களில் நடந்த தேர்வில் 21.52 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்திய அளவில் ஹைதரபாத் மாணவர் முதலிடத்தையும், விஜயவாடா மாணவர் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us