தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழிற்பள்ளிகள் துவங்க அழைப்பு

தொழிற்பள்ளிகள் துவங்க அழைப்பு

தொழிற்பள்ளிகள் துவங்க அழைப்பு


UPDATED : ஜன 22, 2026 10:44 AM

ADDED : ஜன 22, 2026 10:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 22, 2026 10:44 AM ADDED : ஜன 22, 2026 10:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:
மாவட்டத்தில் 2026 - 27 கல்வி ஆண்டிற்கான புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்கல்வி பிரிவுகளை துவக்குதல், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன.

நடப்பு கல்வி ஆண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணைய விண்ணப்பம் மட்டுமே சமர்பித்தால் போதுமானது. அனைத்து விபரங்களுக்கும் ஒரே விண்ணப்பத்தில் தெரிவிக்கலாம்.

விண்ணப்பம்

ஆய்வுக் கட்டணம் RTGS / NEFT மூலம் செலுத்தலாம். அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்பக் கட்டணம் ரூ. 5 ஆயிரம், ஆய்வு கட்டணம் ரூ.8 ஆயிரம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க பிப்., 28 இறுதி நாள். அதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

அங்கீகாரம் குறித்த தகவல், அறிவுரைகள் மேற்கூறிய இணையத்தளம், detischennai@gmail.com என்ற ஈ-மெயில் மூலமும், 044- 2250 1006, 2250 1113 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us