UPDATED : செப் 11, 2024 12:00 AM
ADDED : செப் 11, 2024 08:35 AM
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையத்தில், மருந்தா-ளுநர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்-ளது.
இதுகுறித்து கமிஷனர் மனிஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் மருந்தாளுநர் பணியிடம் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளது. மாத சம்பளம், 15 ஆயிரம் ரூபாய். டிப்ளமோ பார்மசி அல்லது இளநிலை பார்மசி படித்தவர்கள், தமிழ்நாடு மருந்தாளுநர் கவுன்சிலிங்கில் பதிவேற்றம் செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்விச்சான்று நகல் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பித்தை, வரும், 24க்குள், ஆணையாளர், ஈரோடு மாநகராட்சி அலுவலகம், மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈரோடு என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.