தன்னார்வ ஆசிரியர்களுக்கு திறன் வளர் பயிற்சி அளிப்பு
தன்னார்வ ஆசிரியர்களுக்கு திறன் வளர் பயிற்சி அளிப்பு
UPDATED : மே 04, 2024 12:00 AM
ADDED : மே 04, 2024 11:21 AM
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும், ராசிபுரம் ரோட்டரி சங்கமும் இணைந்து, தன்னார்வ ஆசிரியர்களுக்கு கோடைகால திறன் வளர் பயிற்சியை, நேற்று நடத்தின.
செலவில்லாத பரிசோதனைக்கான மூலப்பொருளாக தண்ணீரை எடுத்துக்கொண்டு, அதன் அடர்த்தி, பரப்பளவு, விசை, அழுத்தம், வானவில் உருவாக்குதல், வடிகட்டுதல், விசை, புவி ஈர்ப்பு மையம் போன்ற பரிசோதனைகளை செய்வது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
உடன், மாயாஜால அறிவியல் சோதனைகள், ராக்கெட் ஏவுதல் போன்றவை குறித்து சேலம் விங்ஸ் ஆப் சயின்ஸ் அகாடமியை சேர்ந்த அரவிந்த் விளக்கினார். பள்ளிகளில் செலவில்லாத திட்டங்கள் மற்றும் நடைமுறைகளை உருவாக்கும்போது தொடர்ந்து அவைகள் செயல்பாடுகளாக மாறி கற்பித்தலும், கற்றலிலும் தொடர்ந்து கற்றல் விளைவுகள் ஏற்படுத்துகின்றன என, நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி
நிறுவன முதல்வர் செல்வம் விளக்கினார்.