தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் அடையாள அட்டையில் ஜாதி? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

மாணவர்கள் அடையாள அட்டையில் ஜாதி? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

மாணவர்கள் அடையாள அட்டையில் ஜாதி? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்


UPDATED : ஜூன் 28, 2026 11:11 AM

ADDED : ஜூன் 28, 2026 11:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2026 11:11 AM ADDED : ஜூன் 28, 2026 11:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
'மாணவர்களுக்கான அடையாள அட்டையில், ஜாதி விபரங்கள் இடம் பெற உள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை' என, அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, 'பள்ளி மாணவர்களுக்கு, முகவரி, ஜாதி, ரத்த வகை, ஆதார் அட்டை, தொலைபேசி எண் அடங்கிய ஒரு அடையாள அட்டை வழங்கப்படும். முதல் கட்டமாக, 10, பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு கட்சி தலைவர்கள், கண்டனம் தெரிவித்தனர்.

இது குறித்து, அமைச்சர் செங்கோட்டையன், நேற்று அளித்துள்ள விளக்கம்:

மாணவர்களுக்கான அடையாள அட்டை குறித்து வெளியான கருத்துகள் தொடர்பாக, சில தவறான புரிதல்கள் ஏற்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக, வருவாய் துறை, பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து செயல்படும். ஆனால், மாணவர்களுக்கான அடையாள அட்டையின் வடிவமைப்பு, அதில் இடம்பெறும் விபரங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும், பள்ளிக் கல்வித்துறையின் பரிசீலனை மற்றும் முடிவிற்கு உட்பட்டவை.

மாணவர் அடையாள அட்டையில் இடம் பெற உள்ள விபரங்கள் குறித்து, தற்போது துறைகளுக்கு இடையில் ஆலோசனை நடக்கிறது.

வெளிப்படை

அத்துடன், மாணவர்களின் தனியுரிமை மற்றும் தகவல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், எதிர்காலத்தில் ஏதேனும் மின்னணு தகவல் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டாலும், மாணவரின் பெயர், வகுப்பு, பள்ளி பெயர் மற்றும் ரத்த வகை போன்ற அடிப்படை விபரங்கள் மட்டுமே வெளிப்படையாக இடம் பெறும்.

பிற விபரங்கள், தேவைக்கேற்ப பாதுகாப்பான, 'க்யூ ஆர்' கோடு வடிவில் மட்டுமே, அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாகவும், ஆலோசனைகள் நடக்கின்றன.

எனவே, ஜாதி விபரங்கள், மாணவர் அடையாள அட்டையில் இடம்பெற உள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us