தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/லஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை: உயர்கல்வி துறை அமைச்சர் உறுதி

லஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை: உயர்கல்வி துறை அமைச்சர் உறுதி

லஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை: உயர்கல்வி துறை அமைச்சர் உறுதி


UPDATED : ஜூன் 28, 2026 11:12 AM

ADDED : ஜூன் 28, 2026 11:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2026 11:12 AM ADDED : ஜூன் 28, 2026 11:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
“உயர்கல்வித்துறையில், பணி நியமனம், இட மாறுதல் போன்ற எந்த ஒரு நல்ல நோக்கங்களுக்காகவும், லஞ்சம் வாங்க மாட்டோம்,” என, உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேசினார்.

கோவை நீலாம்பூரில், கதிர் கலை, அறிவியல் கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், அமைச்சர் விஸ்வநாதன் பேசியதாவது:

கடந்த, 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், ஒரு முதல்வரின் அணுகுமுறை, உடல்மொழி, பணிவு, திறமை போன்றவைகளை, தற்போது தான் பார்க்கிறேன்.

முதல்வர் என்னிடம் சொல்லும் போது, 'அருமையான ஒரு துறையை உங்களிடம் கொடுத்துள்ளேன். மிகவும் கவனமாக கையாள வேண்டும்' என தெரிவித்தார்.

தமிழகத்தில் முன்பிருந்த காங்., தலைவர்கள், ஒரு போதும் லஞ்சத்துக்கு இடமளிக்கவில்லை. உயர்கல்வித்துறையில், பணி நியமனம், இடமாறுதல் போன்ற எந்த ஒரு நல்ல நோக்கங்களுக்காகவும், லஞ்சம் வாங்க மாட்டோம். இத்துறையில், முழுமையான ஊழலற்ற நிலையை எட்ட, அரசுக்கு துணை நிற்போம்.

உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால், மாணவர்கள் நினைத்ததை அடையலாம். பெற்றோரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இந்த கலாசாரம் இந்தியாவில் மட்டுமே உள்ளது. நாங்கள் லஞ்சம் வாங்கப்போவது கிடையாது. அதே சமயம், குடிமக்களாகிய நீங்களும் லஞ்சம் கொடுக்க கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us