UPDATED : மே 13, 2025 12:00 AM
ADDED : மே 13, 2025 12:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடெல்லி:
சிபிஎஸ்இ 2025ஆம் ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 13) வெளியிட்டது. மொத்த தேர்ச்சி விகிதம் 88.39 சதவீதம் ஆகும்.
இந்த ஆண்டு, 16,92,794 மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். அதில் 14,96,307 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் மறுமதிப்பீடு அல்லது மறுஆய்வுக்கு விண்ணப்பிக்கலாம். தோல்வியடைந்த மாணவர்கள் துணைத் தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் தங்களது முடிவுகளை cbseresults.nic.in, results.cbse.nic.in, மற்றும் cbse.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பார்வையிடலாம்.