UPDATED : மே 13, 2025 12:00 AM
ADDED : மே 13, 2025 03:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.
பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வை, நாடு முழுதும் 16 லட்சத்து 92 ஆயிரம் பேர் எழுதினர். 17 மண்டலங்களில் 7,330 மையங்களில் தேர்வுகள் நடந்தன. இதில் மொத்தம் 14 லட்சத்து 96 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 88.39 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை விட, 0.41 சதவீதம் அதிகம். இதில் 99.60 சதவீத தேர்ச்சியுடன் விஜயவாடா மண்டலம் முதலிடம் பெற்றுள்ளது.