இணைய வழியாக குறைகளை தெரிவிக்க மாணவர்களுக்கு சென்டாக் அறிவுரை
இணைய வழியாக குறைகளை தெரிவிக்க மாணவர்களுக்கு சென்டாக் அறிவுரை
UPDATED : மே 31, 2024 12:00 AM
ADDED : மே 31, 2024 05:25 PM

புதுச்சேரி:
சான்றிதழை சமர்ப்பிக்க முடியாத மாணவர்கள், விண்ணப்பிக்க சென்டாக் காலகெடுவை நீட்டிக்க வேண்டும் என, எதிர்பார்ப்பில் உள்ளனர்.
நீட் அல்லாத மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை அல்லாத படிப்புகளுக்கு இன்று 31ம் தேதியுடன் விண்ணப்பிக்க காலக்கெடு முடிகிறது. நேற்று வரை 16,616 பேர் விண்ணப்பிக்க பதிவு செய்துள்ள சூழ்நிலையில் 13,451 பேர் மட்டுமே விண்ணப்பங்களை பூர்த்தி செய்துள்ளனர்.
சான்றிதழ் கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விண்ணப்பிக்க முடியாமல் உள்ளனர். இவர்கள் இன்றுக்குள் சான்றிதழ்களை பெற்று சமர்ப்பிக்க வாய்ப்பிலை. எனவே இம்மாணவர்கள் விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு செய்ய வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.
குறைகளை தெரிவிக்க சென்டாக் மாணவர் சேர்க்கை தொடர்பாக பெற்றோர்கள், மாணவர்கள் காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்திற்கு சென்று நேரில் குறைகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்தாண்டு மாணவர்களின் குறைகளை தெரிவிக்க தங்களுடைய லாகின் வழியாகவே ரெய்ஸ் கிரிவன்ஸ் என்ற பெயரில் சென்டாக் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன் வழியாக குறைகளை தெரிவித்தால் 24 மணி நேரத்திற்கு நேரடியாக குறைகள் சரி செய்யப்பட்டுவிடும். சென்டாக் அலுவலக்திற்கு வர தேவையில்லை என, சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.