UPDATED : மே 31, 2024 12:00 AM
ADDED : மே 31, 2024 05:27 PM

சென்னை:
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில், மாணவர் சேர்க்கைக்கு, பெற்றோரின் மொபைல் போன் எண்ணிற்கு, ஓ.டி.பி., அனுப்பியுள்ளதாக, தனியார் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.
தனியார் பள்ளிகளில், கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், இலவச மாணவர் சேர்க்கைக்கு, 1.75 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 1.58 லட்சம் விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்று உள்ளனர். ஒரே பள்ளிக்கு அதிகம் பேர் விண்ணப்பித்து இருந்ததால், குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இதில், தேர்வான மாணவர்களுக்கு, ஓ.டி.பி., அனுப்பப்பட்டுள்ளது. அந்த எண்ணுடன் வரும், 3ம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பித்த பள்ளிகளுக்கு, மாணவர்கள் பெற்றோருடன் சென்று, சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என, தனியார் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துஉள்ளது.