தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலை அறிவியல் படிப்புகளுக்கு சென்டாக் சீட் ஒதுக்கீடு

கலை அறிவியல் படிப்புகளுக்கு சென்டாக் சீட் ஒதுக்கீடு

கலை அறிவியல் படிப்புகளுக்கு சென்டாக் சீட் ஒதுக்கீடு


UPDATED : அக் 02, 2025 10:01 AM

ADDED : அக் 02, 2025 10:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2025 10:01 AM ADDED : அக் 02, 2025 10:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
கலை அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு மாப்-அப் இரண்டாம் சுற்று கவுன்சிலிங் நடத்தி சென்டாக் சீட் ஒதுக்கியுள்ளது.

சீட் கிடைத்த மாணவர்களின் பட்டியல் www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஆட்சேபனை இருந்தால், மாணவர்கள் தங்களுடைய டேஷ் போர்டு வாயிலாக உள்ளே நுழைந்து நாளை 3ம் தேதி காலை 11 மணிக்குள் தெரிவிக்கலாம்.

சீட் கிடைத்த மாணவர்கள் 6ம் தேதி முதல் தங்களுடைய மாணவர் சேர்க்கை கடிதத்தை டவுண்லோடு செய்து கொள்ளலாம். பின் சீட் கிடைத்த கல்லுாரியில் 10ம் தேதி மாலை 5:00 மணிக்குள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேரில் சென்று சேர வேண்டும்.

கலை அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு அடுத்த கலந்தாய்வு ஏதும் நடத்தப்படாது. எனவே, இந்த மாப்-அப் கவுன்சிலிங் சீட் கிடைத்த மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லுாரியில் ரிப்போர்ட் செய்ய வேண்டும்.

மாணவர் சேர்க்கையின்போது ஏதேனும் உதவி தேவைப்பட்டால், 0413-2655570 மற்றும் 2655571 என்ற மொபைல் எண்களில் தொடர் கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us