UPDATED : அக் 02, 2025 10:00 AM
ADDED : அக் 02, 2025 10:01 AM

கோவை:
'தினமலர்' நாளிதழ் மற்றும் எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும், 'அ'னா... 'ஆ'வன்னா... அரிச்சுவடி ஆரம்பம்' எனும், சிறப்பு வித்யாரம்பம் நிகழ்ச்சி, கோவை ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில், இன்று நடக்கிறது.
குழந்தைகளின் கல்வி பயணத்தில், மிக முக்கியமான துவக்கத்தை குறிக்கும் இந்நிகழ்வில், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை, அறங்காவலர் மோகன்தாஸ், கோவை சர்வதேச விமான நிலைய இயக்குனர் சம்பத் குமார் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரியின் இயக்குனர் ராஜாராம் உள்ளிட்டோர், மழலைகளின் பிஞ்சு விரல்களை பிடித்து, 'அ... ஆ...' எழுதி கற்றலை துவக்கி வைக்கின்றனர். இந்நிகழ்ச்சி, காலை 7.35 முதல் 9 மணி வரை நடைபெறுகிறது. இரண்டரை முதல் மூன்றரை வயதுக்கு உட்பட்ட மழலைகள் பங்கேற்கலாம்; அனுமதி இலவசம்.
குழந்தைகளை ஊக்கப்படுத்தும் விதமாக, 'ஸ்கூல் பேக்' இலவசமாக வழங்கப்படும். அரங்குக்கு நேரில் வந்தும் முன்பதிவு செய்து கொள்ள, வசதி செய்யப்பட்டுள்ளது.