UPDATED : ஏப் 18, 2026 03:40 PM
ADDED : ஏப் 18, 2026 03:41 PM
திருப்பூர்:
திருப்பூர், ராக்கியாபாளையத்தில் உள்ள சென்சுரி பவுண்டேசன் பப்ளிக் பள்ளி மாணவர்கள், பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சாதனை புரிந்துள்ளனர்.
மாணவி அனுஷ்கா 500க்கு 494 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவிலும் பள்ளி அளவிலும் முதலிடம் பிடித்துள்ளார்.
மாணவன் சாய்பிரணவ் (491 மதிப்பெண்கள்) இரண்டாம் இடத்தையும், குருசரண் (489 மதிப்பெண்கள்) மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய 31 மாணவர்களில் 28 பேர் சிறப்பிடத்திலும், 3 பேர் முதல் வகுப்பிலும் தேர்ச்சி பெற்று 100 சதவீத வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.
தமிழ் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பாடங்களில் தலா 2 மாணவர்களும், இந்தியில் ஒரு மாணவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
தாளாளர் முனைவர் சக்தி தேவி, முதலிடம் பிடித்த மாணவிக்குத் தங்க நாணயமும், மற்ற இருவருக்குக் காசோலையும் வழங்கிப் பாராட்டினார். பள்ளி முதல்வர் மாயா வினோத் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டலால், எவ்விதக் கூடுதல் வகுப்புகளும் இன்றி மாணவர்கள் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
