UPDATED : ஏப் 18, 2026 03:41 PM
ADDED : ஏப் 18, 2026 03:42 PM
அ நிறம் | அளவு
உடுமலை:
பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கான கோடை கால ஹாக்கி பயிற்சி முகாம் துவங்கியுள்ளது.
வரும் 15 நாட்கள் நடைபெறும் முகாமில், ஹாக்கி விளையாட்டின் அடிப்படை திறன்கள், நுணுக்கங்கள், விளையாடும் முறைகள், யோகா பயிற்சியும் வழங்கப்படுகிறது.
பயிற்சி முகாமை பள்ளி தலைமையாசிரியர் பாபு துவக்கி வைத்து, மாணவர்களை ஊக்குவித்து பேசினார். பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரவேல் பயிற்சியாளராக மாணவர்களுக்கு பயிற்சியளிக்கிறார். துவக்க விழாவில், பள்ளி ஆசிரியர்கள், ஹாக்கி வீரர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
