UPDATED : அக் 09, 2024 12:00 AM
ADDED : அக் 09, 2024 10:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக அரசின் தொழில்முனைவு மேம்பாடு மற்றும் புதுமைக்கான நிறுவனம், ஓர் ஆண்டு சான்றிதழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
படிப்பு:
தொழில்முனைவு மற்றும் புதுமைக்கான பிரிவில் சான்றிதழ் படிப்பு
தகுதி:
12ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமா படிப்புடன் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இந்திய பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
20 முதல் 40 வயது வரை.
விண்ணப்பிக்கும் முறை:
https://oneyearcourse.editn.in/management/form/admissions/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு:
https://www.editn.in/