சி.சி.சி., கம்ப்யூட்டர் பயிலக மாணவிகளுக்கு சான்றிதழ்
சி.சி.சி., கம்ப்யூட்டர் பயிலக மாணவிகளுக்கு சான்றிதழ்
UPDATED : பிப் 17, 2026 01:55 PM
ADDED : பிப் 17, 2026 01:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்:
கடலுார் மஞ்சக்குப்பம் சி.சி.சி., கம்ப்யூட்டர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் அரசு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பயிலக முதல்வர் பத்மகுமார் வரவேற்றார். சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா, போட்டித் தேர்வுக்கான ஆர் பிரண்ட்ஸ் பயிற்சி மைய நிறுவனர் ராஜன் ஆகியோர் அரசு நடத்திய தொழில்நுட்ப கம்ப்யூட்டர் சி.ஓ.ஏ., பிரிவு மற்றும் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
அதனை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் கவிதா, இளைஞர்கள் அதிக நேரம் மொபைல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், ஆன்லைன் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வே ண்டும் என அறிவுறுத்தினார்.
ஆசிரியர் வேல்முருகன் நன்றி கூறினார்.

