ஏ.கே.டி., கல்வி நிறுவன ஆண்டு விழா ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டு
ஏ.கே.டி., கல்வி நிறுவன ஆண்டு விழா ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டு
UPDATED : பிப் 17, 2026 01:58 PM
ADDED : பிப் 17, 2026 02:00 PM

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களில் நடந்த ஆண்டு விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா, மெட்ரிக் பள்ளி, சி.பி.எஸ்.சி., பெண்கள் பள்ளி, மழலையர் மற்றும் துவக்கப் பள்ளி என, கூட்டு நிகழ்வுகளாக நடந்தது. விழாவிற்கு கல்வி நிறுவன தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.
செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், நிர்வாக இணை இயக்குனர் அபிநயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் டி.ஆர்.ஓ., ஜீவா, பயிற்சி கலெக்டர் சுபதர்ஷினி, சி.இ.ஓ., கார்த்திகா, ஆர்.டி.ஓ., முருகன், மாவட்ட கல்வி அலுவலர் விஷ்ணுமூர்த்தி, தாசில்தார் பசுபதி, எச்.டி.எப்.சி., வங்கி மேலாளர் சாமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, பள்ளி மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
ஆண்டு விழாவில் நடந்த பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளில், 3,437 மாணவர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். விழாவில், கடந்தாண்டு 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம், என்.டி.ஏ., நீட், ஜே.இ.இ., ஆகிய நுழைவு தேர்வுகளில் சாதனை புரிந்தோர் மற்றும் தமிழ் திறனறிதல் தேர்வில் சாதித்த மாணவர்கள், பெற்றோர்களுடன் வரவழைத்து கவுரவிக்கப்பட்டனர்.
மேலும், கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து 5, முதல் 20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பல்வேறு ஆசிரியர்களுக்கு, தங்க நாணயங்கள், அலுவலக பணியாளர்களுக்கு வெள்ளிப் பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. விழாவில், கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

