UPDATED : பிப் 17, 2026 02:00 PM
ADDED : பிப் 17, 2026 02:03 PM

காஞ்சிபுரம்:
மாநில அளவிலான கபடி மற்றும் கைப்பந்து போட்டியில், காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலை மாணவியர் முதல் பரிசு பெற்றனர்.
காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலை சார்பில், சென்னை எஸ்.ஐ.வி.இ.டி., கல்லுாரியில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. இதில், சங்கரா பல்கலை மாணவியர் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்றனர்.
இதே போல, வெற்றி துரைசாமி நினைவு கபடி போட்டியில், சங்கரா பல்கலை மாணவியர் முதல் பரிசு பெற்றனர். சென்னை வி.ஐ.டி., பல்கலையில் நடந்த கைப்பந்து போட்டியில் சங்கரா பல்கலை மாணவியர் முதல் பரிசு பெற்றனர்.
முதல் பரிசு பெற்ற மாணவியரை பல்கலை துணைவேந்தர் சீனிவாசு, பதிவாளர் ஸ்ரீராம், உடற்கல்வி இயக்குநர் குணாளன், பயிற்சியாளர்கள் நதியா, ஜோசப் புஷ்பராஜ் ஆகியோர் பாராட்டினர்.

