sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பயிற்சி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சான்றிதழ்

/

வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பயிற்சி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சான்றிதழ்

வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பயிற்சி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சான்றிதழ்

வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பயிற்சி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சான்றிதழ்


UPDATED : பிப் 07, 2026 10:14 AM

ADDED : பிப் 07, 2026 10:15 AM

Google News

UPDATED : பிப் 07, 2026 10:14 AM ADDED : பிப் 07, 2026 10:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வனங்கள், வன உயிரினங்கள் மற்றும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் 25 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.

அதில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் அந்தந்த பள்ளியில் உயிரியியல், சமூக அறிவியல் பயிலும் பிளஸ் 1 மாணவர்கள் 20 பேரை தேர்ந்தெடுத்து மூன்று வார காலம் பகுதி நேர வகுப்பு, செயற்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு பயிற்சிகள் முடிந்த நிலையில், அதில் பங்கேற்ற ஆசிரியர்கள், மாணவ மாணவிகளுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, 25 பள்ளி ஆசிரியர்கள், 500 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார். மேலும் பயிற்சி அளித்த 25 ஆசிரியர்களுக்கும், தலா 2 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷினி, டி.ஆர்.ஓ., ஜீவா, சி.இ.ஓ., கார்த்திகா, ஆர்.டி.ஓ., முருகன் உட்பட ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us