sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

10ம் வகுப்பு முடித்தவருக்கு தபால் துறை பணி வாய்ப்பு

/

10ம் வகுப்பு முடித்தவருக்கு தபால் துறை பணி வாய்ப்பு

10ம் வகுப்பு முடித்தவருக்கு தபால் துறை பணி வாய்ப்பு

10ம் வகுப்பு முடித்தவருக்கு தபால் துறை பணி வாய்ப்பு


UPDATED : பிப் 07, 2026 10:13 AM

ADDED : பிப் 07, 2026 10:14 AM

Google News

UPDATED : பிப் 07, 2026 10:13 AM ADDED : பிப் 07, 2026 10:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்திய அஞ்சல் துறை சார்பில் கிராம அஞ்சல் பணியாளர் (ஜி.டி.எஸ்.) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு.

கிளை தபால் அலுவலர், துணை தபால் அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி பெற பத்தாம் வகுப்பு முடித்தவராக, 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

நேர்முக மற்றும் எழுத்துத்தேர்வு இன்றி மதிப்பெண் மற்றும் காலிப்பணியிட அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

ஜி.டி.எஸ்., ஆக மூன்று ஆண்டுகள் பணியாற்றினால் அடுத்து நடக்கும் தேர்வில் கலந்து கொள்ளலாம், அதில் மதிப்பெண் அடிப்படையில் முன்வருவோருக்கு எம்.டி.எஸ்., என்னும் பல்துறை பணியாளர் பணி கிடைக்கும்.

5 ஆண்டுகள் பணியாற்றினால் அடுத்த தேர்வில் கலந்துகொண்டு 'போஸ்ட் மேன்' மற்றும் 8 ஆண்டுகள் முடித்தால் தபால் உதவியாளர் ஆகலாம்.

ஜி.டி.எஸ்., பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 2009 காலிப்பணியிடங்கள் உள்ளன. நேற்று முன்தினம் முதல் விண்ணப்பித்தல் துவங்கியுள்ளது. வரும் பிப்., 14 வரை பதிவு செய்யலாம்; 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.






      Dinamalar
      Follow us