sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாநில செஸ் போட்டியில் சென்னை, திருவள்ளூர் அபாரம்

/

மாநில செஸ் போட்டியில் சென்னை, திருவள்ளூர் அபாரம்

மாநில செஸ் போட்டியில் சென்னை, திருவள்ளூர் அபாரம்

மாநில செஸ் போட்டியில் சென்னை, திருவள்ளூர் அபாரம்


UPDATED : பிப் 17, 2026 07:25 PM

ADDED : பிப் 17, 2026 07:25 PM

Google News

UPDATED : பிப் 17, 2026 07:25 PM ADDED : பிப் 17, 2026 07:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
மாநில செஸ் போட்டியில், சென்னை, திருவள்ளூர் அணிகள் முதலிடங்களை கைப்பற்றி அசத்தின.

திருவள்ளூர் மாவட்ட சதுரங்க சங்கம், யுக் ஷசாரா சதுரங்க அகாடமி இணைந்து, மாநில அளவிலான சதுரங்க போட்டியை, திருவேற்காடில் உள்ள ஆர்.எம்.கே., பள்ளியில் நேற்று முன்தினம் நடத்தின.

போட்டியில், மாநிலம் முழுதும் இருந்து, 623 சிறுவர், சிறுமியர் பங்கேற்றனர்.

'பிடே' விதிப்படி, 'சுவிஸ்' அடிப்படையில் போட்டிகள் நடந்தன. போட்டியை, பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சிரீஷா துவங்கி வைத்தார்.

மாணவரில் 7 வயது பிரிவில், சென்னையைச் சேர்ந்த தாருஷ்; மாணவியரில் திருவள்ளூர் நிதர்ஷனா ஆகியோர் முதலிடங்களை கைப்பற்றினர்.

அதே போல, ஒன்பது வயது பிரிவில், திருவள்ளூர் முகமது சாத், மாணவியரில் சென்னையைச் சேர்ந்த கைலாஷினி சரவணப்பிரபு; 11 வயது பிரிவில் மாணவரில் சென்னை சாய் சரண், மாணவியரில் திருவள்ளூர் சாய் ஹரிணி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மாணவர் 15 வயது பிரிவில், திருவள்ளூர் ராகவ் சேஷாச்சாரி, மாணவியரில் திருவள்ளூர் மகிஷா பிரதாப்; 25 வயது பிரிவில், மாணவரில் ஹரிஷ் கார்த்திக், மாணவியரில் சென்னை நிர்மலா ஆகியோர் முதலிடங்களை கைப்பற்றினர்.






      Dinamalar
      Follow us