தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆராய்ச்சி, மேம்பாட்டில் தனியார் பங்களிப்பு அதிகரிக்கப்படும்: ஆசிஷ் பாண்டே

ஆராய்ச்சி, மேம்பாட்டில் தனியார் பங்களிப்பு அதிகரிக்கப்படும்: ஆசிஷ் பாண்டே

ஆராய்ச்சி, மேம்பாட்டில் தனியார் பங்களிப்பு அதிகரிக்கப்படும்: ஆசிஷ் பாண்டே


UPDATED : பிப் 17, 2026 07:25 PM

ADDED : பிப் 17, 2026 07:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 17, 2026 07:25 PM ADDED : பிப் 17, 2026 07:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், கொடிசியா ராணுவ புத்தாக்க மற்றும் அடல் இன்குபேஷன் மையத்தின் சார்பில், புத்தாக்க தொடக்க நிலை நிறுவனங்களுக்கு ஒப்புதல் சான்று வழங்குதல் மற்றும் வெற்றி விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது.

கொடிசியா ராணுவ புத்தாக்க மற்றும் அடல் இன்குபேஷன் மையத்தின் இயக்குனர் சுந்தரம் தலைமை வகித்தார்.

இதில் பங்கேற்ற சி.ஐ.ஐ., முன்னாள் தலைவர் நந்தினி பேசுகையில், “தேசிய அளவிலான கட்டமைப்புகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இளைஞர்கள் உள்ளனர். அதற்கான வாய்ப்புகளை மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகின்றன,” என்றார்.

அடல் புத்தாக்க திட்டத்தின் தலைவர் ஆசிஷ் பாண்டே பேசுகையில், “ஆராய்ச்சி, மேம்பாட்டில் தனியார் பங்களிப்பு அதிகரிக்கப்படும். கோவையில் துரிதப்படுத்தும் மையம் ஒன்று துவக்கப்படும். இந்த மையங்களில் முன்னோடி தொழில்நுட்பங்கள் அளிக்கப்படும்.

புதிய கண்டுபிடிப்புகளை அடுத்து, அவற்றை துரிதப்படுத்தி உற்பத்தியை பெருக்க வேண்டும். தொழிற்சாலைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வழி வகுக்க வேண்டும்,” என்றார்.

நிகழ்ச்சியில், கொடிசியா தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். கொடிசியா கவுரவ செயலாளர் யுவராஜ் நன்றி தெரிவித்தார்.

'நியாயமான விலையில் பொருளை விற்கணும்'

பிரிக்கால் நிறுவனர் விஜய் மோகன் பேசுகையில், “ஸ்டார்ட் அப் துவங்க விரும்புவோர் சந்தையில் என்ன தேவை என்பதை உணர்ந்து, அவற்றை உற்பத்தி செய்ய முடிவெடுக்கலாம். வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் நியாயமான விலையில் தயாரிப்புகளை விற்க வேண்டும். தேவையான பொருட்கள் உள் நாட்டில் கிடைக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களை அறிந்து தயாரிப்பில் மாற்றங்களை செய்ய வேண்டும்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us