தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னைஸ் அமிர்தா கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா

சென்னைஸ் அமிர்தா கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா

சென்னைஸ் அமிர்தா கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா


UPDATED : ஜூன் 25, 2026 09:22 PM

ADDED : ஜூன் 25, 2026 09:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 25, 2026 09:22 PM ADDED : ஜூன் 25, 2026 09:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனம், அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2026ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழாவை நடத்தியது.

இவ்விழாவில் பி.எஸ்சி., கேட்டரிங் அண்ட் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன், டிப்ளமோ இன் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன், பி.எஸ்சி., லேட்டரல் என்ட்ரி மற்றும் எம்.பி.ஏ., இன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட படிப்புகளில் பயின்ற 800 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்.

நிகழ்வில் சென்னைஸ் அமிர்தா கல்விக் குழுமத்தின் தலைவர் ஆர். பூமிநாதன் பேசியதாவது:

பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். பட்டமளிப்பு என்பது கல்வியின் முடிவல்ல மாறாக வாழ்நாள் முழுவதும் தொடரும் கற்றல், தலைமைத்துவம் மற்றும் தொழில்முறை சிறப்பிற்கான புதிய தொடக்கம்.

சென்னை, செங்கல்பட்டு, பெங்களூரு, ஹைதராபாத், விஜயவாடா, கொச்சி மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் செயல்பட்டு வரும் சென்னைஸ் அமிர்தா கல்விக் குழுமம், ஹோட்டல் மேனேஜ்மென்ட், ஏவியேசன் அண்ட் ஏர்போர்ட் மேனேஜ்மென்ட், நர்சிங் அண்ட் அலைட் ஹெல்த் சயின்ஸஸ் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் அண்ட் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட துறைகளில் தொழில் வாய்ப்பு மையப்படுத்தப்பட்ட கல்வியை வழங்கி வருகிறது.

இது வரை 31 ஆயிரத்து 651க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ள சென்னைஸ் அமிர்தா, இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, மாலத்தீவு, மொரீஷியஸ் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் முன்னணி நிறுவனங்களில் மாணவர்கள் பணியமர்வதற்கு வழிவகுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மலேசிய ஹோட்டல்கள் சங்கத்துடன் சமீபத்தில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், அச்சங்கத்தின் கீழ் உள்ள 1100 மலேசிய ஹோட்டல்களில் பணியாற்றும் வாய்ப்பு 'சென்னைஸ் அமிர்தா' மாணவர்களுக்குக் கிடைக்கும். வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதில் பெயர் பெற்ற 'சென்னைஸ் அமிர்தா', இந்த ஒப்பந்தத்தின் மூலம் வேலைவாய்ப்புத் துறையில் மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இவ்விழாவில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி.ரவி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளித்து உரையாற்றினார். தனது உரையில், இன்றைய உலகளாவிய பொருளாதார சூழலில் தொடர்ந்து கற்றல், புதுமை, ஒழுக்கமான தலைமைத்துவம் மற்றும் திறன் மேம்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும், இந்நிகழ்வில் நிறுவனத்தின் தலைமை இயக்க அலுவலர் பானுமதி, டீன் சுரேன், முதன்மை கல்வி ஆலோசகர் பால் மற்றும் நர்சிங், பெங்களூரு, பால்கம்பேட், விஜயவாடா மற்றும் ஏவியேஷன் கல்லூரிகளின் முதல்வர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us