தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.டி.ஐ.,யில் மாணவ, மாணவியர் சேர்க்கை பி.டி.ஓ., ஆபீசில் இன்று ஸ்பாட் அட்மிஷன்

ஐ.டி.ஐ.,யில் மாணவ, மாணவியர் சேர்க்கை பி.டி.ஓ., ஆபீசில் இன்று ஸ்பாட் அட்மிஷன்

ஐ.டி.ஐ.,யில் மாணவ, மாணவியர் சேர்க்கை பி.டி.ஓ., ஆபீசில் இன்று ஸ்பாட் அட்மிஷன்


UPDATED : ஜூன் 25, 2026 02:57 PM

ADDED : ஜூன் 25, 2026 02:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 25, 2026 02:57 PM ADDED : ஜூன் 25, 2026 02:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,ல், நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவ மாணவியர் நேரடி சேர்க்கைக்கு, சிறுகாவேரிபாக்கத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், 'ஸ்பாட் அட்மிஷன்' எனப்படும் உடனடி சேர்க்கை முகாம் இன்று நடக்கிறது.

காஞ்சிபுரம் புத்தேரி, கைலாசநாதர் கோவில் தெருவில், உள்ள ஐ.டி.ஐ., எனப்படும் தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழிற்பிரிவுகள் இலவசமாக பயிற்றுவிக்கப்படுகிறது.

இங்கு 2026 - 27ம் கல்வி ஆண்டு 100 சதவீதம் மாணவ, மாணவியர் சேர்க்கை இலக்கை அடைவதற்காக சிறப்பு சேர்க்கை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

முகாம் நடக்குமிடத்தில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர் மற்றும் பெற்றோருக்கு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்வதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, 'ஸ்பாட் அட்மிஷன்' எனப்படும் உடனடி சேர்க்கை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, காஞ்சிபுரம் சிறுகாவேரிபாக்கத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று காலை 10:00 மணிக்கு நேரடி சேர்க்கை முகாம் நடக்கிறது.

இதில், மாணவ, மாணவியர் கல்வி சான்றிதழ் மறறும் ஆவணங்களுடன் வந்து 'ஸ்பாட் அட்மிஷன்' மூலம் ஐ.டி.ஐ.,ல் சேரலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us