அரசு வக்கீல்கள் பொறுப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
அரசு வக்கீல்கள் பொறுப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
UPDATED : ஜூன் 25, 2026 02:55 PM
ADDED : ஜூன் 25, 2026 02:57 PM
கோவை:
மாவட்ட நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக, தி.மு.க.,வை சேர்ந்த வக்கீல்கள் நியமிக்கப்பட்டு, 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்தனர். த.வெ.க., அரசு பொறுப்பேற்றுள்ளதை தொடர்ந்து புதிய அரசு வக்கீல்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ், கூடுதல் செஷன்ஸ் கோர்ட்கள், சார்பு நீதிமன்றங்கள், சிவில் கோர்ட்கள், சிறப்பு கோர்ட்களில் அரசு தரப்பில் ஆஜராக, அரசு குற்ற வியல் வக்கீல், கவர்ன்மென்ட் பிளீடர், சிறப்பு அரசு வக்கீல்கள், கூடுதல் அரசு வக்கீல்கள் உள்பட 25 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. மாவட்ட கலெக்டர் அலுவலக சட்டத்துறை வாயிலாக விண்ணப்பம் பெறப்படுகிறது.
த.வெ.க., மற்றும் கட்சி சாராத வக்கீல்கள் விண்ணப்பித்து வருகின்றனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
