நீங்களும் தொழில் தொடங்கலாம் இன்று ஆலோசனை நிகழ்ச்சி
நீங்களும் தொழில் தொடங்கலாம் இன்று ஆலோசனை நிகழ்ச்சி
UPDATED : ஜூன் 25, 2026 02:54 PM
ADDED : ஜூன் 25, 2026 02:55 PM
சேலம்:
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், தேசிய சர்வதேச சிறு, குறு நடுத்தர தினம், சேலம், அம்மாபேட்டையில் உள்ள சக்தி கைலாஷ் மகளிர் கல்லுாரியில் இன்று கொண்டாடப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் தொழில் முனைவோராக விருப்பம் உள்ளவர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், படித்த தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்காக, 'நீங்களும் தொழில் தொடங்கலாம்' நிகழ்ச்சி நடக்கிறது.
லாபகர தொழில், தொழில் தொடங்க தேவையான தொழில்நுட்பம், வீட்டில் இருந்து செய்யக்கூடிய தொழில், உணவுப்பொருள் பதப்படுத்தல், தொழில் வாய்ப்பு, தொழில் தொடங்க வங்கி கடன், சந்தை வாய்ப்பு, 25 முதல், 35 சதவீதம் அரசு மானியங்கள் குறித்து ஆலோசனை வழங்-கப்படுகிறது
தொழில் முனைவோர் பயிற்சியுடன் கூடிய உணவு பொருட்கள் தயாரித்தல், மைக்ரோ க்ரீன், சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு, தையல் பயிற்சி வாயிலாக சணல் பொருட்களில் இருந்து தயாரிக்கக்கூடிய பல்வேறு பொருட்கள் குறித்த ஒரு மாத இலவச பயிற்சிக்கு விண்ணப்பம் வழங்கப்படுகிறது. விபரம் பெற, 88258 - 12528 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
