பள்ளி, கல்லுாரி கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர்
பள்ளி, கல்லுாரி கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர்
UPDATED : பிப் 15, 2025 12:00 AM
ADDED : பிப் 15, 2025 09:09 PM
சென்னை:
உயர் கல்வி துறை வாயிலாக, 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
* மதுரை மாவட்டம், ஆ.புதுப்பட்டி அரசுகள்ளர் உயர்நிலைப் பள்ளி, பூசலபுரம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி, தேனி மாவட்டம் வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி, ராஜதானி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், கணினி ஆய்வகம் உள்ளிட்டவை கட்டப்பட்டு உள்ளன
* புதுக்கோட்டை மாவட்டம், கிருஷ்ணாஜிபட்டினம் அரசு உயர்நிலை பள்ளியில் நுாலகம், அறிவியல் ஆய்வகம் கட்டப்பட்டு உள்ளன. சிங்கவனம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆயுஷ் பிரிவு பல்நோக்கு கூடம், சுகாதார பகுதி கட்டடம் கட்டப்பட்டு உள்ளன
* கோவை மாவட்டம், புலியகுளம் அரசு கலை அறிவியல் கல்லுாரி, கரூர் மாவட்டம் தரகம்பட்டி அரசு கலை கல்லுாரி, ராமேஸ்வரம் அப்துல் கலாம் அரசு கலை அறிவியல் கல்லுாரி, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அரசு கலை அறிவியல் கல்லுாரி ஆகியவற்றில் புதிய கல்விசார் கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன
* சேலம், கோவை, திருச்சி, தஞ்சாவூர் அரசு பொறியியல் கல்லுாரிகளில் உள் விளையாட்டு அரங்கங்கள் கட்டப்பட்டு உள்ளன
* புதுக்கோட்டை மாமன்னர் கல்லுாரியில் மின்னணு நுாலகம், திருச்சி பாரதிதாசன் பல்கலை காஜாமலை வளாகத்தில் மகளிர் விடுதி, பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரியில் வகுப்பறைகள், கழிப்பறை, ஆய்வகங்கள் கட்டப்பட்டு உள்ளன
* தர்மபுரி அரசு பாலிடெக்னிக்கில், இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களில் வகுப்பறை, ஆய்வகம், கழிப்பறை கட்டப்பட்டுள்ளன
* மதுரை மீனாட்சி அரசு மகளிர் கலை கல்லுாரியில் வகுப்பறைகள், கழிப்பறைகள், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் வகுப்பறைகள், கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன.
சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, இவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அமைச்சர்கள் நாசர், மெய்யநாதன், கோவி. செழியன், தலைமை செயலர் முருகானந்தம், உயர் கல்வி துறை செயலர் சமய மூர்த்தி பங்கேற்றனர்.