sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

விண்ணில் பறந்த விமானங்களை வியந்து ரசித்த பொது மக்கள்

/

விண்ணில் பறந்த விமானங்களை வியந்து ரசித்த பொது மக்கள்

விண்ணில் பறந்த விமானங்களை வியந்து ரசித்த பொது மக்கள்

விண்ணில் பறந்த விமானங்களை வியந்து ரசித்த பொது மக்கள்


UPDATED : பிப் 15, 2025 12:00 AM

ADDED : பிப் 15, 2025 09:08 PM

Google News

UPDATED : பிப் 15, 2025 12:00 AM ADDED : பிப் 15, 2025 09:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலஹங்கா:
பெங்களூரில் ஐந்து நாட்கள் நடந்த, ஏரோ இந்தியா - 2025 விமான கண்காட்சி நேற்று நிறைவு பெற்றது. விமானங்களின் சாகசங்களை காண, நேற்று பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

பெங்களூரு, எலஹங்கா விமானப் படை தளத்தில் ஏரோ இந்தியா - 2025 விமான கண்காட்சி கடந்த 10 ம் தேதி முதல் நேற்று வரை, ஐந்து நாட்கள் நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இக்கண்காட்சி, இம்முறை தி ரன்வே ஆப் பில்லியன்ஸ் ஆப் ஆப்பர்சுனிட்டீஸ் எனும் கருப்பொருளில் நடத்தப்பட்டது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எல்.யு.ஹெச்., ஹெச்.டி.டி., 40, ஐ.ஜெ.டி., தேஜஸ் போன்ற பல விமானங்களும்; அமெரிக்காவின் எப்., 16, ரஷ்யாவின் சுக்கோய் 57 போன்ற பல விமானங்கள் காட்சிப் படுத்தப்பட்டன; இந்த விமானங்கள் சாகசங்களும் நிகழ்த்தி காண்பித்தன. பல்வேறு நாடுகளின் ராணுவ அதிகாரிகள், தளபதிகள் வருகை தந்திருந்தனர்.

கூட்டம்

இந்திய விமானப்படையின் சாகசத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், தற்போதைய அதிநவீன தொழில்நுட்பங்களை பற்றி தெரிந்து கொள்ளும் வகையிலும் கண்காட்சி நடந்தது.

நேற்று முன்தினமும், நேற்றும் பொது மக்கள் பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. நிறைவு நாளான நேற்று, பார்வையாளர்களின் கூட்டம் அலைமோதியது.

கைக்குழந்தை முதல் பெரியவர்கள் வரை பல தரப்பினரும் வந்திருந்தனர். சுட்டெரிக்கும் வெயிலைக்கூட பொருட்படுத்தாமல், விமான சாகசங்களை பார்த்து ரசித்தனர். குறிப்பாக, சூரிய கிரண் குழுவினரின் சாகசத்தை பார்த்த அனைவரும் மெய் சிலிர்த்தனர்.

ஒவ்வொரு விமான சாகசத்தின் போதும், அந்த விமானங்களின் பெயர், அவற்றின் செயல்பாடுகள், முக்கியத்துவம் குறித்து மைக்கில் விளக்கப்பட்டது. இதனை கேட்ட பெற்றோர், தங்கள் குழந்தைகளிடம் சொல்லி மகிழ்ந்தனர்.

ட்ரோன்கள்

மைதானத்தில் இருந்து புகையை கக்கிய படி சென்ற ஹெலிகாப்டர்களை பார்த்து சந்தோஷத்தில் கோஷமிட்டனர். ஜெட் விமானத்தில் இருந்து வரும் சத்தமும், குழந்தைகள் போடும் சத்தமும் விண்ணை தாண்டி ஒலிக்கும் அளவிற்கு இருந்தன. பெற்றோர் தங்கள் குழந்தைகளை, விமானங்கள் அருகே நிற்க வைத்து, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இந்த முறை அதிக அளவிலான ட்ரோன்கள் காட்சிப்படுத்தப்படன. அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ட்ரோன்கள், துப்பாக்கிகளில் உபயோகிக்கப்படும் தோட்டாக்கள், ராக்கெட் லான்சர்கள், ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்பட்டன. பீரங்கி டேங்கர்களின் மாதிரிகள், அவற்றின் வடிவமைப்புகள், இந்திய விமானங்களின் பெயர்களை குறிப்பிட்டால் பரிசுகள் என அட்டகாசமான அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

மொத்தத்தில் ஐந்து நாட்களும் எலஹங்காவே திருவிழா கோலம் பூண்டது. வழக்கம் போல போக்குவரத்து நெரிசலிலும் பெங்களூரு சாதனை படைத்தது.






      Dinamalar
      Follow us