UPDATED : டிச 06, 2025 08:43 AM
ADDED : டிச 06, 2025 08:44 AM
கள்ளக்குறிச்சி:
காலை உணவுத்திட்டத்தின் மூலம் 47,176 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமல்படுத்தினார். இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றதால், இரண்டாம் கட்டமாக அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. காலை உணவு திட்டத்தின் படி, மாணவ, மாணவிகளுக்கு திங்கட்கிழமை ரவா உப்புமா, செவ்வாய்கிழமை காய்கறி சேமியா கிச்சடி, புதன்கிழமை வெண்பொங்கல், வியாழக்கிழமை அரிசி உப் புமா, வெள்ளிக்கிழமை கோதுமை ரவா கிச்சடியும், தினமும் காய்கறி சாம்பாரும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 756 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளில் பயிலும் 47,176 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

