UPDATED : டிச 06, 2025 08:44 AM
ADDED : டிச 06, 2025 08:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:
இந்திய சர்வதேச அறிவியல் விழா நாளை ஹரியானாவில் தொடங்குகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு இந்திய சர்வதேச அறிவியல் விழா தொடங்கப்பட்டது. இந்த விழாவின் 11வது பதிப்பு 2025 டிசம்பர் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை ஹரியானாவின் பஞ்ச்குலாவில் நடைபெறும். அறிவியல் கண்காட்சிகள், வணிகச் சந்திப்புகள், போட்டிகள், கலாச்சார நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இடம்பெறும் இந்த விழா, ஆய்வக கண்டுபிடிப்புகள் மற்றும் சமூகத்திற்கிடையிலான இடைவெளியை குறைக்கும் தளமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

