sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சமூக வலைதளங்களுக்கு அடிமையாகும் குழந்தைகள்

/

சமூக வலைதளங்களுக்கு அடிமையாகும் குழந்தைகள்

சமூக வலைதளங்களுக்கு அடிமையாகும் குழந்தைகள்

சமூக வலைதளங்களுக்கு அடிமையாகும் குழந்தைகள்


UPDATED : பிப் 04, 2026 10:37 AM

ADDED : பிப் 04, 2026 10:46 AM

Google News

UPDATED : பிப் 04, 2026 10:37 AM ADDED : பிப் 04, 2026 10:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சமூக வலைதளங்களுக்கு குழந்தைகள் அடிமையாகும் நிலையை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை தெரிவிக்கும்படி, பொதுமக்களை கேரள அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

உலகம் முழுதும் குழந்தைகள் முதல் முதியோர் வரை சமூகவலைதளங்களுக்கு அடிமையாகும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது, குழந்தைகளை உடல் மற்றும் மனதளவில் பாதிப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனால், குழந்தைகள் சமூகவலைதளங்களை பயன்படுத்த பல்வேறு நாடுகளும் தடை விதித்து வருகின்றன. இதை கேரள அரசும் நடைமுறைப்படுத்த போவதாக தகவல் வெளியாகின.

இதுகுறித்து மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறியதாவது:

ஒரு காலத்தில் வெளிப்புற விளையாட்டுகள் மற்றும் சமூகத் தொடர்புகளால் நிறைந்திருந்த குழந்தைப் பருவம், இப்போது மொபைல் போன் திரைகளுக்குள் சுருங்கிவிட்டது. திரைகளுக்கு முன்னால் நீண்ட நேரம் செலவிடுவது குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும், சமூக ரீதியாகப் பழகும் திறனையும் பாதிக்கிறது.

டிஜிட்டல் உலகத்தை ஒரு தலைமுறை அதிகமாகச் சார்ந்திருப்பது சமூகத்தின் எதிர்காலத்திற்கு கடுமையான சவாலாக அமையக்கூடும். இணையப் பயன்பாட்டை முழுதும் தடை செய்வது அரசின் நோக்கம் அல்ல; மாறாக, தொழில்நுட்பத்தை பொறுப்புடனும், சமநிலையுடனும் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தப்படும்.

சமூக ஊடகங்களை குழந்தைகள் அணுகுவதை ஒழுங்குபடுத்த ஒரு கடுமையான சட்டம் தேவையா அல்லது பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வுத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்பது குறித்து அரசு பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டுள்ளது.

குழந்தைகளின் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதிசெய்ய உதவும் வகையில், ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்க பொதுமக்களின் ஒத்துழைப்பை அரசு கோரியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us