பிரதமர் ரோடு ஷோவில் குழந்தைகள்: சிறார் நீதி சட்டம் எப்படி பொருந்தும்
பிரதமர் ரோடு ஷோவில் குழந்தைகள்: சிறார் நீதி சட்டம் எப்படி பொருந்தும்
UPDATED : ஏப் 09, 2024 12:00 AM
ADDED : ஏப் 09, 2024 12:07 PM
சென்னை:
கோவை மாவட்டத்துக்கு, கடந்த மாதம் 18ம் தேதி பிரதமர் மோடி வந்தார். ரோடு ஷோ நடத்தப்பட்டது. இதில் கோவையில் அரசு உதவி பெறும் சாய்பாபா வித்யாலயம் நடுநிலைப் பள்ளி மாணவர்களை பள்ளிச் சீருடைகளில் அழைத்து சென்றதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், வழக்குப் பதியப்பட்டது. வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளி தலைமை ஆசிரியை புகழ்வடிவு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பள்ளி குழந்தைகளை பிரதமர் நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றது தொடர்பாக பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்படவில்லை. பள்ளிக்கு எதிராக சிறார் நீதி சட்டம் எப்படி பொருந்தும் என்பன குறித்து விரிவாக பதிலளிக்க அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் கோரப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டு விசாரணையை ஏப். 24க்கு தள்ளி வைத்தார்.