sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சீனா குங்பூ செய்து அசத்திய மனித உருவ ரோபோக்கள்

/

சீனா குங்பூ செய்து அசத்திய மனித உருவ ரோபோக்கள்

சீனா குங்பூ செய்து அசத்திய மனித உருவ ரோபோக்கள்

சீனா குங்பூ செய்து அசத்திய மனித உருவ ரோபோக்கள்


UPDATED : பிப் 25, 2026 11:21 AM

ADDED : பிப் 25, 2026 11:22 AM

Google News

UPDATED : பிப் 25, 2026 11:21 AM ADDED : பிப் 25, 2026 11:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீஜிங்:
சீனாவில், மனித வடிவ ரோபோக்கள் பீஜிங்கின் புகழ்பெற்ற 'டெம்பிள் ஆப் ஹெவென்' கோவில் முன்பு நடத்திய கூட்டு குங்பூ நிகழ்ச்சி இணையத்தை கவர்ந்து வருகிறது.

நம் அண்டை நாடான சீனா, ரோபோட்டிக்ஸ் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அதை நிரூபிக்கும் வகையில், 'யுனிட்ரீ ரோபோட்டிக்ஸ்' என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மனித வடிவ ரோபோக்கள், ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சியை நடத்தின.

சிவப்பு நிற டி- ஷர்ட் அணிந்த, 50 ரோபோக்கள், ஒரே மாதிரியான குங்பூ அசைவுகளை வெளிப்படுத்தி பிரமிக்க வைத்தன. இது பாரம்பரிய சீன கலையான குங்பூவையும், நவீன ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த சீன புத்தாண்டு திருவிழாவிலும் இதே ரோபோக்கள் இளம் குங்பூ கலைஞர்களுடன் இணைந்து சவாலான அசைவுகளை துல்லியமாகவும், ஒருங்கிணைந்தும் நடத்தி ஆச்சரியப்படுத்தின.






      Dinamalar
      Follow us