தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம் தமிழ் தேர்வு எளிது; மாணவர்கள் கருத்து

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம் தமிழ் தேர்வு எளிது; மாணவர்கள் கருத்து

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம் தமிழ் தேர்வு எளிது; மாணவர்கள் கருத்து


UPDATED : மார் 12, 2026 06:38 PM

ADDED : மார் 12, 2026 06:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 12, 2026 06:38 PM ADDED : மார் 12, 2026 06:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு உடுமலை, மடத்துக்குளம், தாலுகாவில் உள்ள பள்ளிகளில் நேற்று துவங்கியது.

நேற்று முதல் நாளில் தமிழ் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு பற்றிய கூறிய கருத்துகள்:



தமிழ் தேர்வில், ஒரு மதிப்பெண் கேள்விகள் மிகவும் எளிதாக இருந்தன. மூன்று ஒரு மதிப்பெண் வினாக்கள் பாடத்தின் உள்ளிருந்து கேட்கப்பட்டாலும் பதிலளிக்க முடிந்தது. அனைத்து கேள்விகளும் எழுத எளிதாகவும் பதிலளிக்கக் கூடியதாகவும் இருந்தன. பள்ளியில் சிறப்பாக பயிற்சி எடுத்ததால் அனைத்து வினாக்களுக்கும் சுலபமாக பதிலளிக்க முடிந்தது.

- மதுமிதா, ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொங்கல்நகரம்.

தமிழ் தேர்வில் கேட்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள், 15ல் 13 வினாக்கள் எளிமையாகவும், 2 வினாக்கள் சிந்தித்து எழுதக் கூடியதாகவும் இருந்தது. ஏற்கனவே எழுதி பயிற்சி செய்திருந்ததால், எளிதாக எழுத முடிந்தது. எவ்வித பதட்டம் இல்லாமல் தேர்வு எழுதினேன்.

- தன்வந்த், ஜே.எஸ்.ஆர். மெட்ரிக்., பள்ளி, மடத்துக் குளம்.

பத்தாம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வு மிக எளிமையாகவும் தெளிவாகவும் இருந்தது. இருப்பினும் ஒரு மதிப்பெண் வினாக்களில் 3 வினாக்கள் சிந்தித்து விடையளிக்கும் வகையில் இருந்தது. பாடத்தின் உள்பகுதியையும் படித்திருந்ததால் என்னால் எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க முடிந்தது. எங்கள் ஆசிரியர் கொடுத்த இலக்கணம் பயிற்சியால் என்னால் இலக்கண வினாக்களுக்கு தெளிவாக விடையளிக்க முடிந்தது.

- ஸ்வாதி, ஆர்.வி.ஜி. மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, குறிச்சிக்கோட்டை.

அனைத்து பிரிவு வினாக்களும், எளிதாகவே இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்களில், முதல் வினா மட்டும் புத்தகத்தின் உள்ளிருந்து கேட்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே பள்ளியில் பல முறை திருப்புதல் தேர்வுகள் எழுதி பயிற்சி பெற்றிருந்ததால், கடினமாக தெரியவில்லை. பதட்டம் இல்லாமல், பொதுத்தேர்வை எழுத பள்ளியில் பெற்ற பயிற்சிகள் பயனுள்ளதாக இருந்தது.

- தர்ஷினி, ஸ்ரீ ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பள்ளபாளையம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us