பத்தாம் வகுப்பு துணை தேர்வு இன்று துவக்கம்; 1916 மாணவர்கள் எழுத ஏற்பாடு
பத்தாம் வகுப்பு துணை தேர்வு இன்று துவக்கம்; 1916 மாணவர்கள் எழுத ஏற்பாடு
UPDATED : ஜூலை 08, 2026 06:34 PM
ADDED : ஜூலை 08, 2026 06:36 PM
தேனி:
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுகள் இன்று துவங்குகிறது. மாவட்டத்தில் 4 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை 1916 மாணவர்கள் எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு பொதுத்தேர்வில் தவறிய மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளில் சேர்வதற்கு ஏதுவாக துணைத்தேர்வுகள் ஜூன், ஜூலையில் நடத்தப்படுகிறது. பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுகள் இன்று (ஜூலை 8) துவங்கி ஜூலை 15 வரை நடக்கிறது.
மாவட்டத்தில் தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராயப்பன்பட்டி புனித அல்லோசியஸ் பள்ளி, போடி இசட்.கே.எம்., பள்ளிகள் தேர்வு மையங்களாக செயல்படுகிறது.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் 19 பேர், ஆசிரியர்கள் உதவியுடன் 14 பேர் என மொத்தம் 5 பாடங்களையும் சேர்த்து 1916 மாணவர்கள் எழுதுகிறார்கள். தேர்வு கண்காணிப்பு பணிகளில் 70 ஆசிரியர்கள்,4 தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், 4 பறக்கும் படையினர் ஈடுபட உள்ளனர்.இதே போல் பிளஸ் 1 துணைத்தேர்வும் இன்று துவங்குகிறது. மாவட்டத்தில் 4 மையங்களில் தேர்வு நடக்கிறது.
இத்தேர்வினை 60 மாணவர்கள் எழுத விண்ணப்பித்துள்ளனர்.
