UPDATED : ஜூலை 08, 2026 06:37 AM
ADDED : ஜூலை 08, 2026 06:37 PM

தொண்டாமுத்தூர்:
தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு, முதல்வர் (பொ) செல்வம் தலைமை வகித்தார். இதில், பங்கேற்ற கோவை அரசு கலைக்கல்லூரியின் இணை பேராசிரியர் ரவீந்திரன், தற்போதைய உலகில், திறன் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம், பகுத்தறிவு மற்றும் ஒழுக்கம் மாணவர்களின் வெற்றிக்கு அவசியம்.
ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா போன்ற அரசு திட்டங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை குறித்து நன்கு தெரிந்து, அவற்றை பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் தினசரி உடற்பயிற்சி செய்து, ஆரோக்கிய வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும், என்றார்.
