UPDATED : ஆக 29, 2025 12:00 AM
ADDED : ஆக 29, 2025 05:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
2025-2026ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் (தனித் தேர்வர்கள்) பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதன்படி, பழைய பாடத்திட்டத்தில் உள்ள தனித் தேர்வர்கள், செப்., 1 முதல் செப்., 19 வரை தங்களது மாவட்ட கல்வி அலுவலகங்களில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.125 ஆகும்.
விண்ணப்பதாரர்கள் www.dge.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு மைய விவரங்கள் மற்றும் ஹால் டிக்கெட் பின்னர் வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட கல்வி அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.