தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ அரசு பள்ளிகள் தோறும் துாய்மைப்பணி அவசியம்

அரசு பள்ளிகள் தோறும் துாய்மைப்பணி அவசியம்

அரசு பள்ளிகள் தோறும் துாய்மைப்பணி அவசியம்


UPDATED : மே 01, 2025 12:00 AM

ADDED : மே 01, 2025 10:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 01, 2025 12:00 AM ADDED : மே 01, 2025 10:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
அரசுப்பள்ளிகளில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு, கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் வாயிலாக, துாய்மைப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு துவக்கம் முதல், மேல்நிலை வரை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பணியாளர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மாதந்தோறும், அவர்களுக்கான ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை. பல மாதங்கள் தாமதமாகி தான், ஊதியம் வழங்கப்படுகின்றன.

இதனால் சில பள்ளிகளில், துாய்மை பணியாளர்கள் அடிக்கடி பணிகளை புறக்கணித்து செல்கின்றனர். மேலும், குறிப்பிட்ட பணிகளை மட்டுமே பார்த்துச்செல்கின்றனர். இதனால் பள்ளியின் சுகாதாரம் பாதிக்கப் படுகிறது.

தற்போது முழு ஆண்டு விடுமுறை துவங்க உள்ளதால், விடுமுறை முடியும் வரை பள்ளிகளில் பராமரிப்பு பாதிக்கப்படுகிறது.

ஊராட்சி நிர்வாகத்தின் மேற்பார்வையில் , தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் வாரம் ஒருமுறை வீதம் முழு துாய்மைப் பணிகளை மேற்கொள்வதற்கும், அதற்கேற்ப பணியாளர்களை நியமிக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளி மேலாண்மைக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us