UPDATED : மே 01, 2025 12:00 AM
ADDED : மே 01, 2025 10:17 AM
பொள்ளாச்சி :
வகுப்பறையில் பாடம் மட்டுமின்றி, நாடக கற்பித்தல் முறையையும் இணைந்து பயிற்றுவிக்க வேண்டும், என, நாடக தயாரிப்பு பயற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது.
பொள்ளாச்சி அருகே, புளியம்பட்டி பி.ஏ., கல்வியியல் கல்லுாரியில், நிகழ் நாடக மையம் சார்பில் நாடக தயாரிப்பு மற்றும் பயிற்சி முகாம் நடந்தது. பி.ஏ., கல்வி நிறுவனங்கள் தலைவர் அப்புக்குட்டி தலைமை வகித்தார். துணைத் தலைவர் லட்சுமி முன்னிலை வகித்தார். முன்னதாக, கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் சண்முகராஜா பேசியதாவது:
கதைக்கும், கற்பித்தலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எந்தவொரு தகவலையும், அனுபவம் இல்லாமல், கற்பிக்க முடியாது. மாணவர்களுக்கு செய்தியை மட்டும் சொல்லி போனால், அது ஒருபோதும் பயன்படாது.
வகுப்பறையில் பாடம் மட்டுமின்றி, நாடக கற்பித்தல் முறையையும் இணைந்து பயிற்றுவிக்க வேண்டும். அவை மட்டுமே உடல் மற்றும் மனதை ஒன்றிணைக்கும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

