முதல்வர் கோப்பை யோகா போட்டி: உடலை வில்லாக வளைத்த மாணவர்
முதல்வர் கோப்பை யோகா போட்டி: உடலை வில்லாக வளைத்த மாணவர்
UPDATED : செப் 22, 2026 11:52 AM
ADDED : செப் 22, 2026 11:54 AM
திருப்பூர்:
திருப்பூர் பார்க்ஸ் கல்லுாரியில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட யோகா போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கல்லுாரி மாணவ, மாணவியர், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
கல்லுாரி முதல்வர் நசீமா, துணை முதல்வர் கமல்ராஜ் போட்டிகளை துவக்கி வைத்தனர். மாநில யோகாசன போட்டி பொறுப்பாளர் ஆனந்தமுருகன், மாவட்ட யோகாசன போட்டி பொறுப்பாளர் வேல்முருகன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
மாணவர் பிரிவில், 7 பேரும், மாணவியர் பிரிவில் 15 பேரும், பொதுமக்கள் ஆண்கள் பிரிவில் 5 பேரும், பெண்கள் பிரிவில் 3 பேரும், அரசு ஊழியர் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 4 பேரும் பங்கேற்றனர்.
மாணவ, மாணவியர் பிரிவில் முதல் மூன்று இடங்களை பெறுபவர்கள் மட்டுமே மாநில போட்டியில் பங்கேற்க உள்ளனர். பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான போட்டி மாவட்ட அளவில் மட்டுமே நடைபெறுவதால், குறைந்த அளவிலான பங்கேற்பாளர்களே கலந்து கொண்டனர்.
