தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காலநிலை கல்வி பயிற்சி முகாம் கலெக்டர் துவக்கி வைப்பு

காலநிலை கல்வி பயிற்சி முகாம் கலெக்டர் துவக்கி வைப்பு

காலநிலை கல்வி பயிற்சி முகாம் கலெக்டர் துவக்கி வைப்பு


UPDATED : அக் 22, 2026 05:46 PM

ADDED : அக் 22, 2026 05:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 05:46 PM ADDED : அக் 22, 2026 05:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
விழுப்புரத்தில் மாவட்ட வனத்துறை மூலம் காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் காலநிலை கல்வி பயிற்சி முகாம் நடந்தது.

கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். இதில், கலெக்டர் பேசுகையில், “பள்ளி மாணவர்களிடையே காலநிலை மாற்றத்திற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த பயிற்சி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மொத்தம், 3 தினங்கள் நடக்கும் பயிற்சியில், காலநிலை மாற்றம் குறித்த புரிதலை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது,” என்றார்.

இதில், சதுப்பு நிலங்கள் தொடர்பான கலந்தாய்வு பயிலரங்குகளில் பங்கேற்றவர்களுக்கு பயிற்சிக் கருவிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஆனந்த் குமார் சிங், மாவட்ட வன அலுவலர் குருசாமி, சி.இ.ஓ., பாலமுரளி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் நந்தகோபாலகிருஷ்ண உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us