UPDATED : அக் 22, 2026 05:45 PM
ADDED : அக் 22, 2026 05:46 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்:
இந்திய பள்ளிகள் விளையாட்டு சங்கம், தமிழ்நாடு சார்பில், 14 வயது பிரிவு மாணவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் தேர்வு போட்டி, தேனியில் நடந்தது.
இதில், திருமுருகன்பூண்டி அருகேயுள்ள பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் தினேஷ் சந்திரன், தமிழக அணிக்காக விளையாட தேர்வாகி உள்ளார்.
தேர்வான மாணவரை, பள்ளி தலைமையாசிரியர் (கூடுதல் பொறுப்பு) சுமித்ரா, உடற்கல்வி ஆசிரியர் சசிகுமார் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினர்.
