இடைநின்ற மாணவர்கள் வீடுகளுக்கு சென்று அறிவுரை வழங்கிய கலெக்டர்
இடைநின்ற மாணவர்கள் வீடுகளுக்கு சென்று அறிவுரை வழங்கிய கலெக்டர்
UPDATED : அக் 02, 2026 06:09 PM
ADDED : அக் 02, 2026 06:10 PM
திண்டுக்கல்:
சாணார்பட்டி ஒன்றியம் கணவாய்ப்பட்டியில் இடைநின்ற மாணவர்களின் வீடுகளுக்கு சென்ற கலெக்டர் துர்கா அவர்களது பெற்றோர்களிடம் கல்வியின் அவசியம் குறித்து எடுத்துக் கூறினார்.
சாணார்பட்டி ஒன்றியம் தவசிமடை ஊராட்சியில் ரூ.16.96 லட்சம் மதிப்பில் புதிய குளம் அமைக்கும் பணி, ராமன்செட்டிபட்டியில் ரூ.9 லட்சம் மதிப்பில் நாற்றுப்பண்ணை அமைக்கும் பணி, ரூ.5.83 கோடியில் புதிதாக ஒன்றிய அலுவலக கட்டடம் கட்டுமான பணிகள் நடக்கின்றன. இப்பணிகளை கலெக்டர் துர்கா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோபால்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்துகளின் கையிருப்பு விபரங்கள், டாக்டர்கள், பணியாளர்களின் எண்ணிக்கை, வருகைப் பதிவேடுகளை பார்வையிட்டார்.
கணவாய்பட்டியில் பள்ளி இடைநின்ற மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பெற்றோர்களிடம் கல்வி கற்றலின் அவசியம் குறித்து எடுத்துரைத்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபா ராஜமாணிக்கம், அண்ணாத்துரை, உதவி பொறியாளர்கள் ராஜாத்தி, விளக்கன், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஹரிணி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
