திண்டல் வி.இ.டி., கல்லுாரியில் தொழில்நுட்ப புத்தாக்க நிகழ்வு
திண்டல் வி.இ.டி., கல்லுாரியில் தொழில்நுட்ப புத்தாக்க நிகழ்வு
UPDATED : அக் 02, 2026 06:07 PM
ADDED : அக் 02, 2026 06:09 PM
ஈரோடு:
ஈரோடு அருகேயுள்ள திண்டல் வி.இ.டி., கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லுாரியில், 'வேர்களிலிருந்து உயர்வோம்' எனும் கருப்பொருளில் தொழில் நுட்ப புத்தாக்க நிகழ்வு நடந்தது.
வேளாளர் கல்வி அறக்கட்டளை தாளாளர் சந்திரசேகர், அறக்கட்டளை நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், யுவராஜா, கல்லுாரி முதல்வர் நல்லசாமி மற்றும் புல முதன்மையர் லோகேஷ்குமார் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அக்சென்சர் நிறுவன தொழில்முறை செயற்கை நுண்ணறிவுப்பிரிவு மூத்த மேலாளர் ஸ்ரீராம் கிரிஸ் வாசுதேவன், 'ஆர்வத்துடன் இருங்கள்' என்ற தலைப்பில், தொழில்நுட்ப யுகத்தின் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதன் அவசியம் குறித்து பேசினார்.
ஈரோடு கலெக்டர் கந்தசாமி, கால்பந்து பயிற்சி பயிற்றுனர் ஹரிதா, திரைப்பட பின்னணி பாடகர் சாய் விக்னேஷ் ஆகியோர், பல்வேறு தலைப்புகளில் பேசினர். ஏற்பாடுகளை வி.இ.டி., கல்லுாரி கணினி அறிவியல் துறை பேராசிரியை கார்த்திகா, கணித துறைத்தலைவர் ராதிகா முன்னிலையில் செய்யப்பட்டிருந்தது.
