தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரி இணை இயக்குனர் அலுவலகம் இரவில் முற்றுகை

கல்லூரி இணை இயக்குனர் அலுவலகம் இரவில் முற்றுகை

கல்லூரி இணை இயக்குனர் அலுவலகம் இரவில் முற்றுகை


UPDATED : நவ 29, 2025 10:29 AM

ADDED : நவ 29, 2025 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2025 10:29 AM ADDED : நவ 29, 2025 10:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
தற்காலிக பேராசிரியர்களுக்கு, அனுபவ சான்று வழங்கக்கோரி, கோவை மண்டல கல்லூரி இணை இயக்குனர் அலுவலகத்தை, தற்காலிக பேராசிரியர்கள் முற்றுகையிட்டனர்.

தமிழகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், தற்காலிகமாக பணிபுரியும் பேராசிரியர்கள், அனுபவ சான்று கோரி, ரேஸ்கோர்ஸில் உள்ள மண்டல கல்லூரி இணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர்.

நேற்று வரை சான்று வழங்கவில்லை. உடனடியாக சான்று கேட்டு, நேற்று இரவு, மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தை தற்காலிக பேராசிரியர்கள் முற்றுகையிட்டனர். அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, அப்போதே அனுபவ சான்று வழங்கப்பட்டது.

மண்டல கல்லூரி இணை இயக்குனர் செண்பகலட்சுமி கூறுகையில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் இருந்து, 4,200 பேர் விண்ணப்பித்துள்ளனர். பலர் இறுதி நேரத்தில் விண்ணப்பித்ததால், விண்ணப்பங்களை பரிசீலிக்க கூடுதல் நேரம் தேவைப்பட்டது. தற்போது வரை, 3,970 பேருக்கு சான்று வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ளவர்களுக்கு (நாளை) நவ.30க்குள் வழங்கப்படும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us