தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமுதாய திறன் பயிற்சி பள்ளி திட்டம் விண்ணப்பங்கள் வரவேற்பு

சமுதாய திறன் பயிற்சி பள்ளி திட்டம் விண்ணப்பங்கள் வரவேற்பு

சமுதாய திறன் பயிற்சி பள்ளி திட்டம் விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : நவ 29, 2025 10:29 AM

ADDED : நவ 29, 2025 10:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2025 10:29 AM ADDED : நவ 29, 2025 10:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் சமுதாய திறன் பயிற்சி பள்ளி திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:


தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் சமுதாய திறன் பயிற்சி பள்ளி திட்டம் துவங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதன் மூலம் கொத்தனார், எலக்ட்ரீஷியன், இருசக்கர வாகன பழுது பார்ப்பு, 'ஏசி' மெக்கானிக், ஆரி எம்ராய்டரி, வாகன ஓட்டுநர் உரிமம், சூரிய ஒளி பலகை நிறுவுதல், அழகு நிலைய மேலாண்மை போன்ற 30 வகையான தொழில் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் 150 சமுதாய திறன் பயிற்சி பள்ளிகள் மூலம் 3,000 பயனாளிகளுக்கு சி.எஸ்.எஸ்., மூலம் பயிற்சி வழங்கி வேலை வாய்ப்பும் ஏற்படுத்தப்பட உள்ளது.

இலவசமாக, உள்ளுரிலேயே, குறுகிய காலத்தில், பகுதி நேரமாக வழங்கப்படும். இப்பயிற்சிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பயனாளிகள், விழுப்புரம் மாவட்ட திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வட்டார இயக்க மேலாளர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

மேலும், அந்தந்த பகுதி வட்டார இயக்க மேலாளர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us