sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆவண எழுத்தர் தேர்வு எப்போது?

ஆவண எழுத்தர் தேர்வு எப்போது?

ஆவண எழுத்தர் தேர்வு எப்போது?


UPDATED : நவ 29, 2025 10:30 AM

ADDED : நவ 29, 2025 10:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2025 10:30 AM ADDED : நவ 29, 2025 10:31 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
ஆவண எழுத்தர் உரிமம் வழங்குவதற்கான தேர்வு நடத்த, அரசின் அனுமதிக்காக பதிவுத்துறை காத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலகம் அருகிலும், ஐந்து முதல் 10 பேர் வரை உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்கள் உள்ளனர். இதில், ஒவ்வொரு பத்திரம் தயாரிப்பதிலும் ஆவண எழுத்தர்களுக்கான கட்டணம் என்ன என்பதை பதிவுத்துறை வரையறுத்துள்ளது.

இது மட்டுமல்லாது, ஒவ்வொரு ஆவணத்திலும் அதை தயாரித்த ஆவண எழுத்தரின் உரிமம் எண், தொலைபேசி எண் போன்ற விபரங்கள் இடம் பெறுவது கட்டாயம். உரிமம் இல்லாத ஆவண எழுத்தர்கள் தயாரித்த பத்திரங்கள் பதிவுக்கு ஏற்கப்பட மாட்டாது.

தமிழகத்தில் ஆவண எழுத்தர்களுக்கு தேர்வு நடத்தி, மாவட்ட, மாநில அளவில் உரிமம் வழங்குவது பதிவுத்துறையின் பணி. கடந்த பல ஆண்டுகளாக ஆவண எழுத்தர் தேர்வுகள் நடக்காததால், பழைய நபர்கள் மட்டுமே இதில் ஈடுபட முடிகிறது.

இதுதொடர்பாக, பல்வேறு தரப்பில் இருந்து வந்த கோரிக்கைகள் அடிப்படையில், புதிதாக ஆவண எழுத்தர்கள் தேர்வு நடத்தப்படும் என, தமிழக அரசு 2021ல் அறிவித்தது. இதற்கான விதிமுறைகளும் தயாரிக்கப்பட்ட நிலையில், தேர்வு தொடர்பான எந்த அறிவிப்பும் வரவில்லை. அதனால், புதிதாக ஆவண எழுத்தராக வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:


தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, 4,613 பேர் உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்களாக உள்ளனர். பொது மக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், இது மிகவும் குறைவு. எனவே, புதிய உரிமம் வழங்க வேண்டியது அவசியம். இதற்கான தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். அமைச்சரின் அனுமதி கிடைத்தவுடன், தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us