மின்சார ரயிலில் கற்களை வீசி கல்லுாரி மாணவர்கள் அடாவடி
மின்சார ரயிலில் கற்களை வீசி கல்லுாரி மாணவர்கள் அடாவடி
UPDATED : ஆக 05, 2024 12:00 AM
ADDED : ஆக 05, 2024 09:06 AM
சென்னை:
தாம்பரத்தில் நேற்று காலை புறப்பட்ட புறநகர் மின்சார ரயில், சென்னை கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்த ரயில் சைதாப்பேட்டை அருகே வந்தபோது, தண்டவாளம் அருகே நின்றிருந்த நந்தனம் அரசு கலை கல்லுாரி மாணவர்கள் சிலர், ரயில் படிக்கட்டுகளில் பயணித்த பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களை நோக்கி கல்லெறிந்தனர்.
இதை பார்த்த ஓட்டுனர், ரயிலை நிறுத்தினார். அப்போது கீழே குதித்த பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களும், தண்டவாள பாதையில் இருந்த கற்களை எடுத்து நந்தனம் மாணவர்களை நோக்கி வீசினர்.
கற்களை கண்மூடித்தனமாக வீசியதில், ரயில் ஜன்னலின் கண்ணாடி உடைந்து, பயணியர் சிலரும் காயமடைந்தனர். மேலும், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இருதரப்பும் மோதி கொண்டதால், பயணியர் சிலர், அச்சத்தில் ஓடினர்.
தகவலறிந்து மாம்பலம் ரயில்வே பாதுகாப்பு படையினர் வருவதற்குள், மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.